கிரிக்கெட் டெஸ்ட் தொடர் - முதல் இன்னிங்சில் இந்தியா அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட்...!

Viral Video India Indian Cricket Team Australia Cricket Team
By Nandhini Feb 11, 2023 06:53 AM GMT
Report

இந்தியா - ஆஸ்திரேலிய கிரிக்கெட் டெஸ்ட் தொடரில், முதல் இன்னிங்சில் இந்தியா அணி 400 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இந்தியா - ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்

ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதற்கான முதல் போட்டி நேற்று முதல் மார்ச் 13ம் தேதி வரை இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.

இந்த டெஸ்ட் தொடர் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கானது என்பதால் அதை 3-0 அல்லது 2-0 என வென்றால் தான் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 2ம் இடத்தை பிடித்து ஃபைனலுக்கு முன்னேற முடியும்.

எனவே, இந்திய அணிக்கு இத்தொடர் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. நேற்று முன்தினம் இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்து வருகிறது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாளிலேயே 177 ரன் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கி விளையாடி வருகிறது.

இப்போட்டியில், இந்திய கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 171 பந்துகளில் ரோகித் சதம் அடித்து அசத்தினார். இதைத் தொடர்ந்து விளையாடிய அவர் 120 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனை தொடர்ந்து இந்தியா அணி நேற்று நடந்த 2-ம் நாள் ஆட்டத்தில் 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்திருந்தது.

india-total-400-runs-australia-viral-video

இந்தியா அணி 400 ரன்களுக்கு ஆல் அவுட்

இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. ஜடேஜா, அக்சர் பட்டேல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஜடேஜா 70 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆனாலும், அக்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட்டானார். இதனால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 400 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது.

இந்தியா முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியாவை விட 223 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் இருக்கிறது. உணவு இடைவேளைக்கு பின் ஆஸ்திரேலியா தனது 2வது இன்னிங்சை தொடங்க இருக்கிறது.