முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் : இசட் பிளஸ் பாதுகாப்பு

Mukesh Dhirubhai Ambani
By Irumporai 2 மாதங்கள் முன்

தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகேஷ் அம்பானிக்கு இசட் பிளஸ்

 இந்தியாவில் முக்கியமான தொழிலதிபர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு கடந்த சில ஆண்டுகளாக இவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதை இதை இசட் பிளஸ் ஆக அதிகரிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்தியாவில் மிக முக்கிய தலைவர்கள், தலைவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல், முக்கிய பிரபலங்கள் போன்றவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது .

முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் : இசட் பிளஸ் பாதுகாப்பு | India Threat To Mukesh Ambani Life Z Plus Securit

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஐபி என்கிற மத்திய புலனாய்வு அமைப்பு உள்துறை அமைச்சகத்திற்கு அண்மையில் ஒரு அறிக்கை அனுப்பி இருக்கிறது.

மத்திய அரசு தகவல்

இதன் பின்னரே முகேஷ் அம்பானியின் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கிட மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.   

முகேஷ் அம்பானி உயிருக்கு அச்சுறுத்தல் : இசட் பிளஸ் பாதுகாப்பு | India Threat To Mukesh Ambani Life Z Plus Securit

 இதை அடுத்து இசட் பிளஸ் பாதுகாப்பு படை பிரிவில் 10 தேசிய பாதுகாப்பு கமாண்டோக்கலள் உள்பட 55 பாதுகாப்பு படை வீரர்கள் முகேஷ் அம்பானிக்கு பாதுகாப்பு அளிப்பார்கள் என்று தெரிய வருகிறது.