என்னது பிப்ரவரி 3 ல கொரோனா மூன்றாவது அலையா ? - அதிர்ச்சி தகவல் வெளியிட்ட ஐஐடி விஞ்ஞானி

india corona3wave
By Irumporai Dec 07, 2021 04:01 AM GMT
Report

ஒமைக்ரான் வைரசஸ் பிப்ரவரிக்குள் 3ஆம் அலை உண்டாகும் என்று ஐஐடி விஞ்ஞானி மனிந்திர அகர்வால்  அதிர்ச்சி தகவல் அளித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது 20 க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது .இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான் டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவி உள்ளது.

இந்தியாவில் இது வரை ஒமைக்ரான்  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பிப்ரவரிக்குள் 3ஆம் அலை உண்டாகி  உச்சத்தை தொடும் என  ஐஐடி விஞ்ஞானியுமான மனிந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஒமைக்ரான் வைரஸ் காரணமாக, நாட்டில் தினமும் 1 முதல் 1 லட்சத்து 50 பேர் வரை பாதிக்கப் படலாம். ஆனால் இது இரண்டாவது அலையை விட  குறைவாகவே இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

புதிய மாறுபாடு கொண்ட இந்த வைரஸ் அதிக அளவில் பரவும் தன்மை கொண்டது. ஆனால் டெல்டா வைரஸ் போல அதி தீவிரம் இந்த வைரஸ் - ல் கிடையாது என்றும்,  தென்னாப்பிரிக்காவில் உள்ள மருத்துவமனைகளில் டெல்டா  நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என  அவர் கூறியுள்ளார்.