அலறவிடும் இந்தியா; 41 தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக்கோங்க - கனடாவுக்கு உத்தரவு!
கனடாவின் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெரும் விரிசல்
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில், இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக, கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இதனால், இரு நாடுகளுக்கிடையில் பெரும் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, அங்கு விசா நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கனடாவின் 40 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றுக்கொள்ள இந்தியா உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கனடா தூதர்கள்
இந்தியாவில் மொத்தம் 62 கனடா அதிகாரிகள் உள்ள நிலையில் அவர்களின் எண்ணிக்கையை 41 ஆக வரும்காலத்தில் குறைக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. இதனால் அதிர்ச்சியான ஜஸ்டின்,
‛இந்தியா உடனான மோதலை அதிகரிக்க விரும்பவில்லை. இருநாடுகளுடனான பதற்றத்தை அதிகரிக்க கனடா விரும்பவில்லை. இந்தியாவுடன் பொறுப்புடனும், ஆக்கப்பூர்வமாகவும் செயல்பட விரும்புகிறேன்.
கனடா மக்களுக்கு உதவும் வகையில் பொறுப்புடன் செயல்படுவதில் உறுதியாக இருக்கிறேன். அதோடு கனடா மக்களுக்கு உதவ வேண்டும் என்றால் எங்களின் தூதர்கள் இந்தியாவில் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.