கடந்த 12 மாதங்களாக இந்திய அணி வீரர்கள் சந்தித்த கடுமையான பயணம் ! உருக்கமாக பேசிய பயிற்சியாளர்!
இந்திய அணி வீரர்கள் கடந்த ஒரு வருடமாக சந்தித்த கடுமையான பயணத்தை பற்றி இந்திய ஆல்ரவுண்டர் கிரிக்கெட் வீரர் ஸ்ரீதர் விளக்கிக் கூறியுள்ளார்.
மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் எப்படி தோல்வியை பெற்றது என்ற காரணத்தையும் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு இறுதியில் சுமார் இரண்டு மாதம் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி வீரர்கள் அனைவரும் பயோ பபுள்ளில் தங்கியிருந்து விளையாடினார்கள். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை மிக சிறப்பாக விளையாடி கைப்பற்றி, பின்னர் அங்கிருந்து நேரடியாக இந்தியா வந்து இங்கே மறுபடியும் பயோ பபுள்ளில் தங்கி இருந்து இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களை விளையாடி முடித்தார்கள்.
அதன் பின்னர் அனைவரும் மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக பயோ பபுள்ளில் பங்கெடுத்துக் கொண்டார்கள். ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதும், மீண்டும் மும்பையில் தங்கி பயோ பபுள்ளில் இருந்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே பயோ பபுள்ளில் தங்கி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் தற்போது விளையாடி முடித்துள்ளார்கள்.
மீண்டும் அவர்கள் இங்கிலாந்துக்கு எதிராக நடக்க இருக்கின்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பயோ பபுள்ளில் பங்கெடுத்துக் கொள்வார்கள். மனரீதியாக இந்திய வீரர்கள் அனைவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாகவே பயோ பபுள்ளில் மாறி மாறி பங்கெடுத்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார்கள். என்னை பொறுத்தவரையில் அவர்களக்கு இது கடுமையான பயணம் என்று இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் வீரர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.