இந்திய அணியின் அடுத்த டி20 போட்டிக்கான கேப்டன் இவர்தான் - வீரேந்தர் சேவாக் ஓபன் டாக்
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
மேலும் டி20 உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணியின் டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக தற்போதைய கேப்டன் விராட் கோலி சமீபத்தில் அறிவித்திருந்தார்.
இதனால் பிசிசிஐ டி20 போட்டிகளுக்கான புதிய இந்திய அணியின் கேப்டனை தேர்வு செய்யும் பணிகள் மும்முரம் காட்டி வருகிறது.
தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் இந்திய அணியின் அடுத்த டி20 தொடருக்கான கேப்டன் யார் என்ற விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்தர் சேவாக் பத்திரிகையாளர் சந்திப்பின்போது டி20 தொடரின் தொடருக்கான அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவை தான் நியமிக்க வேண்டுமென தெரிவித்துள்ளாார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்திய அணியின் அடுத்த டி20 தொடர் கேப்டனாக திகழ்வதற்கு அதிக நபர்கள் வரிசையில் உள்ளன.
ஆனால், இந்திய அணியின் அடுத்த கேப்டனாக செயல்படுவதற்கான அனைத்து திறமையும், தகுதியும் இந்திய அணியின் அனுபவ வீரர் ரோகித் சர்மாவுக்கு தான் உள்ளது.
ரோகித் சர்மா ஐபிஎல் தொடரில் மிகத் திறம்பட செயல்பட்டு மும்பை இண்டியன்ஸ் அணி ஐந்து முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ரோகித் சர்மாவை தான் நியமிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

CWC 6: Identity Food சுற்றில் வெற்றியாளராக மாறிய 3 போட்டியாளர்கள்- முதல் நாளே அடித்த ஜாக்போட் Manithan
