இந்திய அணியின் ஜெர்சியில் இடம் பெற்றுள்ள ஒற்றை ஸ்டாருக்கான காரணம் இதுதான் தெரியுமா?
ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரை இந்தியா நடத்துகிறது. சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில், இந்திய அணியின் ஷார்டர் பார்மெட் கிரிக்கெட் போட்டிகளுக்கான ஜெர்சியில் வழக்கமாக மூன்று ஸ்டார்கள் இருக்கும். 1983 மற்றும் 2011 50 ஓவர் உலகக் கோப்பை வெற்றி மற்றும் 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை பிரதிபலிக்கும் விதமாக அந்த ஸ்டார்கள் இருக்கும்.
ஆனால் தற்போது இந்திய அணியின் டி20 ஜெர்சியில் இடம் பெற்றுள்ள இந்த ஒற்றை ஸ்டார், 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை குறிப்பிடும் வகையில் உள்ளது.
நிச்சயம் இந்த முறை கோப்பையை வெல்லும் பேவரைட் அணிகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அதனை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உறுதி செய்துள்ளனர். ‘நூறு கோடி மக்களின் உற்சாக ஜெர்ஸி’என இந்த புதிய ஜெர்ஸி புரோமோட் செய்யப்பட்டடுள்ளது.

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

கொழும்பில் உயிர்மாய்த்த மாணவி: வெடிக்கும் போராட்டங்கள் - ஆசிரியருக்கு எதிராக கல்வி அமைச்சின் அதிரடி IBC Tamil

பாகிஸ்தான் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்புகள்..! சிறிலங்கா எயார்லைன்ஸின் அவசர அறிவிப்பு IBC Tamil
