ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்!!

india team tokyo olympic going
By Anupriyamkumaresan Jul 18, 2021 05:25 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in விளையாட்டு
Report

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழுவினர் டோக்கியோ சென்றடைந்தனர்.

கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக்ஸ் போட்டிகள், கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக இன்னும் சில தினங்களில் ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 119 வீரர், வீராங்கனைகள் உள்பட மொத்தம் 228 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது. இதில் 67 வீரர்கள், 52 வீராங்கனைகள் அடங்குவார்கள்.

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க டோக்கியோ சென்றடைந்த இந்திய வீரர்கள்!! | India Team Going To Tokyo For Olympic

85 பந்தயங்களில் இந்திய அணி பங்கேற்கிறது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அதிக எண்ணிக்கை கொண்ட இந்திய அணி இது தான். இந்நிலையில் இந்திய அணியின் துப்பாக்கிச் சுடுதல் குழு நேற்று காலை டோக்கியோவில் தரையிறங்கியது.

இந்த குழுவில் வீரர்கள், அதிகாரிகள் என்று மொத்தம் 90 பேர் இடம் பெற்றிருந்தனர். அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதன் முடிவுகளுக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.