எதுக்குடா இவர தேவையே இல்லாம வச்சிருக்கீங்க - கடுப்பான இந்திய ரசிகர்கள்

தொடர்ந்து பந்துவீசாமல் இருக்கும் ஹர்திக் பாண்டியாவிற்கு இந்திய அணியில் இடம் கொடுப்பது ஏன் என ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி, பும்ராஹ் மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுகிறார்.

இந்தநிலையில், கடந்த போட்டிகளை போலவே இந்த போட்டியிலும் பந்துவீசாத ஹர்திக் பாண்டியா கிரிக்கெட் ரசிகர்களின் விமர்ச்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

பந்துவீச முடியாத ஒருவரை எந்த அடிப்படையில் ஆல் ரவுண்டராக இந்திய அணி ஏற்று கொண்டு அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வருகிறது என கேள்வி எழுப்பும் ரசிகர்கள், ஹர்திக் பாண்டியாவால் பந்துவீச முடியாவிட்டால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்