“திருச்சி டிஎன்பிஎல் ஆலை ரூ.2000 கோடியில் விரிவாக்கம்”- முதலமைச்சர் அறிவிப்பு
திருச்சியில் உள்ள டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவுபடுத்தப்பட உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி ஶ்ரீரங்கம் கோயிலில் இன்று சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர், பின்னர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது, தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஶ்ரீரங்கம் விளங்கி வருவதாகவும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியதே காரணம் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவரித்த முதலமைச்சர், திருச்சி டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், முக்கொம்பு கதவணை திட்டப் பணிகள் 3 மாத காலத்திற்குள் செயல்படுத்தக் கூடும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து, 2021 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதி, அதிமுவின் கோட்டையாக இருக்க வேண்டும் எனவும், அதற்கு பொதுமக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுகொண்டார்.