ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற போராட்டம் அறிவிப்பு

india-tamilnadu-india
By Jon Jan 10, 2021 02:04 PM GMT
Report

இலங்கை கடற்படையின் தாக்குதலை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளதால் பரபரப்பாகியுள்ளது.

நேற்று கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கற்கள், பாட்டில்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும் இரண்டு படகுகளை சேதப்படுத்தியதுடன், 9 பேரை பிடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.

எல்லைதாண்டி மீன் பிடித்ததாக கூறி, சிறைபிடித்த மீனவர்களை விடுவிக்கும் வரை கடலுக்கு செல்லப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.