175 ரன்கள் லீட் - இங்கிலாந்தை பவுலர்களை வெளுத்த KL ராகுல், ஜடேஜா..!
இந்தியா அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வலுவான லீட்டை பெற்றுள்ளது.
டெஸ்ட் போட்டி
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆல் அவுட்டாக, நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 23 ஓவர்களில் ஒரு விக்கெட் இழந்து 119 ரன்களை எடுத்திருந்தது.
2-ஆம் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணியில், துவக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 80 ரன்களை எடுத்து அவுட்டாகினார். அடுத்து கில் 23 ரன்னில் ஆட்டமிழக்க, பின்னர் கை கோர்த்த கே.எல்.ராகுல் - ஸ்ரேயாஸ் ஐயர் இணை சற்று தாக்குப்பிடித்து ஆடியது.
தனது 50-வது டெஸ்ட் போட்டியில் அரை சதமடித்த கே.எல்.ராகுல் 86 ரன்னில் கேட்ச் கொடுத்து அவுட்டாகி வெளியேறினார். ஸ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களை எடுத்து அவுட்டாக, பின்னர் ஜடேஜா - ஸ்ரீகர் பாரத் இணையும் நிலைத்து நின்று ஆடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஸ்ரீகர் பாரத் 41 ரன் எடுத்து அவுட்டாக, 2-ஆம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்களை குவித்துள்ளது. ரவீந்திர ஜடேஜா அரை சதத்தை கடந்து குவித்து ஆட்டநேர முடிவு வரை 81 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கிறார்.
அக்சர் படேல் 35 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கின்றார். இங்கிலாந்து அணி தரப்பில், டாம் ஹாட்டலி (Tom Hartley) மற்றும் ஜோ ரூட்(Joe Root) தலா 2 விக்கெட்டுகளும் ஜாக் லீச்(Jack Leach), ரேகன் அகமது (Rehan Ahmed) தலா 1 விக்கெட் கைப்பற்றியுள்ளனர்.
இங்கிலாந்து அணியை விட இந்திய அணி 2 -ஆம் ஆட்டநேர முடிவில் 175 ரன்கள் முன்னிலை வகிக்கிறது குறிப்பிடத்தக்கது.