மிக மட்டமாக ஃபீல்டிங் செய்த தென்னாப்பிரிக்கா - கே.எல்.ராகுலுக்கு அடித்த அதிர்ஷ்டம்
இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி மிக மோசமாக விக்கெட் ஒன்றை கோட்டை விட்டது அந்த அணி ரசிகர்களிடையே அதிருப்தியை உண்டாக்கியது.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. பார்ல் நகரில் நடந்த முதலாவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான 2வது ஒரு நாள் போட்டி அதே பார்ல் நகரில் இன்று நடக்கிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி அந்த அணி ரிஷப் பண்ட் (85), கேப்டன் கே.எல்.ராகுல்(55) அதிரடியில் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் பேட்டிங்கின் போது தென்னாப்பிரிக்க அணி மிக மோசமாக ஃபீல்டிங் செய்தது.
அதாவது கேஷவ் மகராஜ் வீசிய 15வது ஓவரின் கடைசி பந்தில் ரிஷப் பண்ட் அடித்த ஷாட் நேரடியாக தென்னாப்பிரிக்க வீரரின் கையில் சிக்கியது. இதனை சரியாக பார்க்காத கே.எல்.ராகுல் பாதி தூரம் ஓடி வந்துவிட்டார். ஆனால் பந்து வீரரின் கையில் சிக்கியதை பார்த்த ரிஷப் பண்ட் ரன் ஓடாமல் தனது இடத்திற்கு மீண்டும் வந்துவிட, ராகுல் என்ன செய்வது என்று தெரியாமல் ரிஷப் பண்ட் நின்ற இடத்திற்கே ராகுலும் வந்துவிட்டார். இப்படி ஒரே முனையில் இரண்டு வீரர்களும் நின்றனர்.
இதனையடுத்து சுலபமான ரன் அவுட் என்ற தென்னாப்பிரிக்க ரசிகர்கள் நினைத்த போது ஃபீல்டர் எறிந்த பந்தை கேஷவ் மகராஜ் தவறவிட, அவருக்கு பின்னால் நின்ற வீரரும் பந்தை பிடிக்காமல் விட்டார். இந்த நேரத்தை பயன்படுத்தி கொண்ட ராகுல், மீண்டும் மறுமுனைக்கு ஓடி வந்துவிட்டார். இதனால் இருவரும் ரன் அவுட் ஆகாமல் தப்பித்தனர்.

Tamizha Tamizha: பதக்கம் வாங்கும் போது பக்கத்தில் இல்லாத அப்பா....அரங்கத்தில் தொகுப்பாளர் கொடுத்த பதில் Manithan

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
