இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா

Sri Lanka India
By Thahir Jun 04, 2022 02:59 AM GMT
Report

இலங்கைக்கு 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கியது இந்தியா.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;

இலங்கைக்கு 3.3 டன் மருத்துவ பொருட்களை வழங்கியது இந்தியா | India Supplied Medical Supplies To Sri Lanka

இலங்கை மக்களுக்கு இந்தியா அளித்த மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வந்தபோது மருந்துகள் பற்றாக்குறை குறித்து சுவா செரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆவன செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார். அதன்படி 3,300 கிலோ மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.