2-வது டி20 கிரிக்கெட் தொடர் - இன்று இலங்கை - இந்தியா அணி நேருக்கு நேர் மோதல்...!

Sri Lanka Cricket India Indian Cricket Team
By Nandhini Jan 05, 2023 06:34 AM GMT
Report

2-வது டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இலங்கை - இந்தியா அணி நேருக்கு நேர் மோத உள்ளது.

முதல் டி20 கிரிக்கெட் தொடர் -

இலங்கை கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் முதலாவது 20 ஓவர் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இந்தியா - இலங்கை அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

india-sri-lanka-2nd-t20-cricket

இன்று இந்தியா - இலங்கை நேருக்கு நேர் மோதல்

இந்நிலையில், இரு அணிகளும் 2-து டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு புனே மைதானத்தில் நேருக்கு நேர் மோத உள்ளன. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

முதல் போட்டி தோல்வி அடைந்த இலங்கை அணி, இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியாவிற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் களத்தில் இறங்க உள்ளது. வெற்றிக்காக இரு அணிகளுக்கிடையே போட்டி கடுமையாக இருக்கும் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற உள்ளது.