டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ளப்போகும் இந்திய வீரர்களுடன் பிரதமர் மோடி உரைந்துரையாடல்!
வரும் 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.
இப்போட்டியில் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தியாவைச் சேர்ந்த 120க்கும் மேற்பட்ட வீரர்கள் தகுதிப் பெற்றிருக்கிறார்கள். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 11 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள்- வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி வரும் 13-ந் தேதி மாலை 5 மணிக்கு காணொலி மூலம் கலந்து பேச உள்ளார். இந்த கலந்துரையாடலில் வீரர்கள்- வீராங்கனைகள் பிரதமர் மோடியுடன் பேசுகிறார்கள்.
அப்போது பிரதமர் மோடி அவர்களை ஊக்கப்படுத்த உள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வீரர்கள் – வீராங்கனைகளுக்கு வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்துள்ளார்.