சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலையில் வெடி விபத்து

attack INDIA tamilnadu bomb
By Jon Feb 25, 2021 06:19 PM GMT
Report

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையர்குறிச்சியில் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்து தற்போது நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்தில் பட்டாசு ஆலையின் பத்துக்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வெடி விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வெடி விபத்தில் சிக்கி காயங்களுடன் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

விபத்து குறித்த முழு சேத விவரம், உயிரிழப்புகள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இது போல கடந்த பிப்ரவரி 12-ம் தேதி சாத்தூரில் நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர்.

மேலும் வெடி விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இது போன்ற வெடி விபத்துக்கள் சமீப நாட்களாக அதிகரித்து வருவதால் அதனை தவிர்ப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.