ராஜபக்சக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்க கூடாது - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்..!
ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த ராஜபக்சக்களுக்கு இந்தியா தஞ்சம் அளிக்க கூடாது என மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது.
அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் பிரதமர் மகிந்த இராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சே கடல் வழியாக இந்தியா வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளியாகியிருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
போர் குற்றவாளிக்கு ஒரு போதும் இந்தியா தஞ்சம் அளிக்க கூடாது என்று அன்புமணி ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது. அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது!(1/4)#SrilankanCrisis
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 11, 2022