குஜராத் அருகே பரபரப்பு - கடலில் 2 சரக்கு கப்பல்கள் பயங்கர மோதல்

india-ships-collide
By Nandhini Nov 27, 2021 10:15 AM GMT
Report

குஜராத்தின், கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு 2 சரக்கு கப்பல்கள் மோதிக் கொண்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத்தின், கட்ச் வளைகுடா பகுதியில் நேற்று இரவு எம்விஎஸ் ஏவியேட்டர் மற்றும் அட்லாண்டிக் கிரேஸ் (MVs Aviator & Atlantic Grace) என்ற 2 கப்பல்கள் இரண்டும் மோதிக்கொண்டன. நல்லவேளையாக எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. ஆனால், கப்பலைச் சுற்றி எண்ணெய் படலம் படர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகவலை அடுத்து, உடனடியாக சம்பவ இடத்திற்கு, இந்திய கடலோரக் காவல்படையினர் விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது குறித்து அதிகாரபூர்வ வெளியிட்ட அறிக்கையின்படி, “இந்திய கடலோர காவல்படை கப்பல்கள், ஹெலிகாப்டர் ஆகியவை விபத்து நடந்த பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எண்ணெய் கசிவு அல்லது 2 வணிக கப்பல்களிலிருந்து எந்தவித கடல் மாசுபாடும் இல்லை என்றும்,அந்த பகுதியில் உள்ள தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.