20 ஓவர் உலகக் கோப்பை அரையிறுதி: கோலி, பாண்ட்யா அரைசதம் : வெற்றி பெறுமா இங்கிலாந்து
டி20 உலக கோப்பையின் 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றனர். இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொஞ்சம் தடுமாற்றம்
முதல் பந்தில் கேஎல் ராகுல் பவுண்டரி அடித்தாலும் 5 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து விராட் கோலி- ரோகித் சர்மா ஜோடி நிதானமாக ஆடினர். பவுர் பிளேயில் இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் மட்டுமே அடித்திருந்தது.
A terrific half-century from Hardik Pandya helps India set a target of 169 ?#INDvENG | ?: https://t.co/HlaLdeP00a
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
Head to our app and website to follow the #T20WorldCup action ? https://t.co/wGiqb2eXqM pic.twitter.com/hBG1gEU6FA
தடுமாற்றத்துடன் ஆடிய ரோகித் சர்மா 28 பந்துகளில் 27 ரன்களுடன் ஆட்டமிழந்தார். இதனையடுத்து பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய சூர்ய குமார் யாதவ் 14 ரன்னில் வெளியேறினார்.
விராட் பாண்டயா அதிரடி
அடுத்ததாக விராட் கோலி - பாண்ட்யா ஜோடி அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய விராட் கோலி அரை சதம் அடித்து அவுட் ஆனார்.
Virat Kohli brings up a magnificent fifty but departs immediately!#INDvENG | ?: https://t.co/HlaLdeP00a
— T20 World Cup (@T20WorldCup) November 10, 2022
Head to our app and website to follow the #T20WorldCup action ? https://t.co/wGiqb2eXqM pic.twitter.com/416dmIhmG2
தொடர்ந்து அதிரடி காட்டிய பாண்ட்யா 29 பந்தில் அரை சதம் அடித்தார்.இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவரில் 68 ரன்களை இந்திய அணி எடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.