8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு - சுகாதார அமைச்சகம் தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு
நாடு முழுவதும் கடந்த வாரத்தில் தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று கடந்த 2 நாட்களாக படிப்படியாக குறைந்து வருகிறது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 61,233 ஆக அதிகரித்துள்ளது.
தகவல்
டெல்லியில் 4 பேர், ஹரியாணா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர், கேரளாவில் 4 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6,702 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
நேற்று ஒரு நாளில் மட்டும் 749 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றவும், முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.