என்னதான் ஆச்சு நம்ம இந்தியன் டீமுக்கு? இந்திய அணி சொதப்பல் பேட்டிங் ,நியூசிலாந்து அணிக்கு 111 ரன்கள் மட்டுமே இலக்கு!

INDvsNZ IndiaVsNewZealand
By Irumporai Oct 31, 2021 04:11 PM GMT
Report

நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியதடுமாறிய நிலையில் 110 ரன்கள் எடுத்துள்ளது.

டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியும், இந்திய அணியும் மோதி வருகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் கடுமையாக திணறியது. இந்திய அணியின் முக்கிய பேட்ஸ்மேன்களான இஷான் கிஷன் (4), கே.எல் ராகுல் (18), ரோஹித் சர்மா (14) மற்றும் விராட் கோலி (9) என அனைத்து முன்னணி வீரர்களும் மோசமாக விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

இதன்பின் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா நீண்ட நேரம் தாக்குபிடித்தாலும், இருவராலும் இறுதி வரை அதிரடியாக விளையாட முடியவில்லை. ரிஷப் பண்ட் 19 பந்துகளில் 12 ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 24 பந்துகளில் 23 ரன்களிலும் விக்கெட்டை இழந்தனர்.

கடைசி நேரத்தில் ஜடேஜா ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் அடித்து ஓரளவிற்கு கை கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி வெறும் 110 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி சார்பில் அதிகபட்சமாக டிரண்ட் பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், இஷ் சோதி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்