“எங்களை சோதிக்காதீங்கடா” - இங்கிலாந்தை கதற விட்ட இந்திய பேட்ஸ்மேன்கள்
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி தட்டுத்தடுமாறி 181 ரன்கள் சேர்த்துள்ளது.
புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து-இந்தியா இடையேயான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களும், இங்கிலாந்து 391 ரன்களும் குவித்து ஆல் அவுட்டானது.
இதனைத் தொடர்ந்து 27 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர்.
அதேசமயம் புஜாரா(45 ரன்கள் -206 பந்துகள்), ரஹானே( 61 ரன்கள் -146 பந்துகள்) நீண்ட நேரம் களத்தில் நின்று இங்கிலாந்து வீரர்களின் பொறுமையை சோதித்தனர். இறுதியாக 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்து 157 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இங்கிலாந்து அணி தரப்பில் அதிகப்பட்சமாக மார்க் வுட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். நாளை ஒருநாள் ஆட்டம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் கை ஓங்கியுள்ளது. அதற்கு ஈடுகொடுத்து இந்திய அணி வலுவான ஸ்கோரை நிர்ணயிக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.