தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள்ஆதரவு: பள்ளிக் கல்வித்துறை

india-school-tamilnadu-student
By Kanagasooriyam Jan 11, 2021 03:38 PM GMT
Kanagasooriyam

Kanagasooriyam

in இந்தியா
Report

தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்ததாக பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தமிழகத்தில் வரும் 16ஆம் தேதியில் இருந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகளை திறக்கக்கூடாது என எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகளிடம் கருத்து கேட்க , மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இதில் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்ததாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த முறை பெற்றோர்களிடம் கருத்து கேட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவிப்பதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது.