‘எவனுடைய அப்பன் வந்தாலும் கைது செய்ய முடியாது’ – பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு

india-samy-baba
By Nandhini May 27, 2021 09:39 AM GMT
Report

நாடே கொரோனாவால் சின்னாபின்னாமாகிக் கொண்டிருக்கும் வேளையில், பதஞ்சலி நிறுவனரானா யோகா சாமியார் பாபா ராம்தேவ் தொடர்ந்து ஏதாவது சர்ச்சையை கிளப்பிவிட்டுக் கொண்டு இருக்கிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பாபா ராம்தேவ், அலோபதி மருத்துவம் முட்டாள்தனமானது என்று பிரச்சினையில் சிக்கினார்.

இவருக்கு கண்டனம் தெரிவித்தது இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ). அதோடு அல்லாமல், பாபா ராம்தேவ் பகீரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியது. அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தனிடம் வலியுறுத்தியது.


இதனையடுத்து, ஹர்ஷ் வர்தன் பாபா ராம்தேவை கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் எழுதினார்.

அவரின் கடிதத்தை ஏற்று தனது கருத்தை வாபஸ் பெறுவதாக பாபா ராம்தேவ் கூறினார்.

ஒருவழியாக பிரச்சினை முடிந்தது என்று நினைத்தால், மீண்டும் பிரச்சினை கிளம்பியுள்ளது. தான் புத்திசாலி என நினைத்து, 25 கேள்விகளை முன்வைத்து அதற்குப் பதிலளிக்குமாறு ஐஎம்ஏ-க்கு சவால் விடுத்தார் பாபா ராம்தேவ்.

‘எவனுடைய அப்பன் வந்தாலும் கைது செய்ய முடியாது’ – பாபா ராம்தேவ் வீடியோவால் பரபரப்பு | India Samy Baba 

இதனால் கொதித்தெழுந்த ஐஎம்ஏ-வின் உத்தரகாண்ட் கிளை அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால், 1,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என நேற்று நோட்டீஸ் அனுப்பியது.

இந்நிலையில், காங்கிரஸைச் சேர்ந்த கவுரவ் பந்தி என்பவர் பாபா ராம்தேவ் பேசிய ஒரு வீடியோ சமூகவலைத்தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “இந்த பாபா ராம்தேவை எவனுடைய அப்பன் வந்தாலும் கைது செய்ய முடியாது என்று கூச்சல் போடுகிறார். அவர்களால் முடிந்ததை செய்துகொள்ளட்டும் என்று நக்கல் தொனியில் பேசியுள்ளார்.

வீடியோவை வெளியிட்ட கவுரவ் பந்தி, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் டேக் செய்துள்ளார்.