ராமர் கோவிலுக்காக ஆப்கான் சிறுமி பிரதமர் மோடிக்கு அனுப்பிய புனித நீர்

india-samugam-ramartemple-kapul-water
By Nandhini Nov 01, 2021 04:16 AM GMT
Report

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. கோவிலை கட்டுவதற்கு பயன்படுத்துவதற்காக 115 நாடுகளில் இருந்து ஓடும் நதிகள் மற்றும் கடல்களில் இருந்து நீர் வரவழைக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு சிறுமி காபுல் நதிநீரை அயோத்தி ராமஜென்ம பூமி வழங்குவதற்காக பிரதமர் மோடிக்கு அனுப்பி வைத்தார். அதன்படி புனித நீரை பெற்றுக் கொண்ட உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று, அந்த நீரை அயோத்தியில் ராம ஜென்ம பூமியில் ஊற்றி அபிஷேகம் செய்து வணங்கினார்.

ராமருக்கு வழிபாடு செய்த பிறகு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ஆப்கான் சிறுமி ஒருவர் அனுப்பிய காபூல் ஆற்று நீரைப் பெற்றுக் கொண்டபோது, நான் மிகுந்த வேதனை அடைந்தேன். ஆப்கானில் பெண்கள் நிலைமை குறித்து கவலை அடைகிறேன். தாலிபான்கள் இந்தியாவைக் குறி வைக்க வேண்டாம், இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தத் தயங்காது என்று எச்சரித்தார்.               

ராமர் கோவிலுக்காக ஆப்கான் சிறுமி பிரதமர் மோடிக்கு அனுப்பிய புனித நீர் | India Samugam Ramartemple Kapul Water

ராமர் கோவிலுக்காக ஆப்கான் சிறுமி பிரதமர் மோடிக்கு அனுப்பிய புனித நீர் | India Samugam Ramartemple Kapul Water