விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் - போராடும் விவசாயிகள் வீட்டிற்கு செல்லுங்கள் - பிரதமர் மோடி

india-samugam-modi
By Nandhini Nov 19, 2021 04:52 AM GMT
Report

விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி இன்று காலை 9 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்தினார். அப்போது, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், புதிய வேளாண் சட்டங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. அதில் மத்திய, மாநில அரசுகளின் பிரதிநிதிகள், வேளாண் வல்லுனர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. ஆனால், எங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை.

விவசாயிகளிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். போராட்டம் செய்து வரும் விவசாயிகள் வீடுகளுக்கு செல்லுங்கள் என்றார்.

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.