முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உயிரிழந்தார் - விமானப் படை வெளியிட்ட அறிவிப்பு

india-samugam-helicopter-crash--pipin-rawat
By Nandhini Dec 08, 2021 12:56 PM GMT
Report

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 13 பேர் உயிரிழந்த நிலையில், தலைமை ராணுவத் தளபதி பிபின் ராவத் உயிரிழந்தாக தகவல் வெளியாகி உள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே, காட்டேரி மலைப்பகுதில் ராணுவ ஹெலிகாப்டர் வானில் பறந்துக் கொண்டிருந்த போது, பனிமூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் கீழே விழுந்து வெடித்து சிதறி விபத்துக்குள்ளானத.

இந்த ஹெலிகாப்டர் விபத்தில், 14 பேர் பயணம் செய்தனர். இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிகிச்சைப் பலனின்றி, 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு ஆண் மட்டும் சிகிச்சையில் உள்ளார்.

இது குறித்து இந்திய விமானப் படை இன்று வெளியிட்டுள்ள டுவீட்டில், ‘துரதிர்ஷ்டவசமான இந்த விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரின் மனைவில் மதுலிகா ராவத் மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்’ என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, இது தொடர்பாக நீலகிரி ஆட்சியர் உள்பட அதிகாரிகளிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் விசாரித்தார். இது குறித்து ஆய்வு மேற்கொள்ள இன்று மாலை 6 மணிக்குத் தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை செல்கிறார்.

சம்பவ இடத்தை நேரில் பார்வையிட உள்ளார். அவருடன் தமிழகக் காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு, முதல்வரின் உதவியாளர் உதயச்சந்திரன், ஏடிஜிபி டேவிட்சன் ஆகியோர் உடன் செல்கின்றனர்.