வெடித்து சிதறிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து – மத்திய அமைச்சர்கள் செய்தியாளர் சந்திப்பு

india-samugam-helicopter-crash
By Nandhini Dec 08, 2021 09:55 AM GMT
Report

மத்திய அமைச்சரவை கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்க இருக்கிறார். கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து வெலிங்டன் சென்ற போது எம்.ஐ ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் முப்படைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேர் பயணம் செய்திருக்கிறார்கள்.

பனி மூட்டம் காரணமாக ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குன்னூரில் விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர், ஒன்றரை மணி நேரமாக தீப்பிடித்து எரிகிறது. விமான பெட்ரோல் என்பதால் ஹெலிகாப்டரில் தீ அணையாமல் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது. விபத்து நடந்த இடத்தில் 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் இருந்து காயங்களுடன் மீட்கப்பட்ட 3 பேர் சிசிக்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதனால், இதுவரை 7 ராணுவ அதிகாரிகள் உயிரிழந்திருக்கிறார்கள். விபத்து நடத்த இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் தான் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையம் இருக்கிறது. தற்போது மீட்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் கூட்டம் முடிந்த நிலையில் இன்று மாலை 4 மணி அளவில் செய்தியாளர்களை மத்திய அமைச்சர்கள் சந்திக்க இருக்கிறார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விவரம் தொடர்பாக தெரிவிக்க இருக்கிறார். மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் சிக்கிய நிலையில் அவரது நிலையைப் பற்றி அமைச்சர்கள் தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது. முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உடல் நிலை குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.