போராட்டம் உடனடியாக நிறுத்தப்படாது - போராட்டம் தொடரும் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

india-samugam-farmers
By Nandhini Nov 19, 2021 07:14 AM GMT
Report

போராட்டம் உடனடியாக வாபஸ் பெற இயலாது. நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக நாங்கள் காத்திருப்போம் என்று விவசாயிகள் சங்கம் தெரிவித்திருக்கிறது.

இன்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுடன் உரை நிகழ்த்தினார். அப்போது, 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும், வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் 3 வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என்று அறிவித்தார்.

இந்நிலையில், பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டாலும், குளிர்கால கூட்டத்தொடரில் அதிகாரப்பூர்வமாக 3 சட்டங்களும் திரும்ப பெறும் வரை போராட்டம் தொடருவோம் என்று விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் கைவிட பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் டெல்லியில் போராடும் விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் திகாயத் தனது டுவிட்டரில் போராட்டம் உடனடியாக வாபஸ் பெறப்படாது, நாடாளுமன்றத்தில் விவசாய சட்டங்கள் ரத்து செய்யப்படும் நாளுக்காக காத்திருப்போம் என பதிவிட்டிருக்கிறார்.