பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது – மத்தியப் பிரதேச முதலமைச்சர்

india-samugam
By Nandhini Nov 14, 2021 06:31 AM GMT
Report

பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் என்று மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருக்கிறார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள போபால் நகரில் இந்திய கால்நடை மருத்துவ சங்கத்தின் சார்பில் மகளிரணி மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டார்.

அப்போது அந்த மாநாட்டில் அவர் பேசுகையில், நாட்டில் பசுக்கள் மற்றும் மாடுகள் இல்லாமல் பல வேலைகள் நடைபெறாது. எனவே அவை மிகவும் முக்கியமானவை. பசுக்கள், அவற்றின் சாணம், சிறுநீர் ஆகியவை ஒரு தனிநபரின் பொருளாதாரத்தை மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் வலுப்படுத்த உதவி செய்கிறது என்றார். 

பசுக்களின் சாணம் மற்றும் சிறுநீர் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறது – மத்தியப் பிரதேச முதலமைச்சர் | India Samugam