டெல்லியில் காற்று மாசு - நாளை முதல் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை

india-samugam
By Nandhini Nov 14, 2021 03:21 AM GMT
Report

டெல்லியில் நாளை முதல் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டிருக்கிறார்.

சமீப நாட்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், நடப்பாண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு, டெல்லியில் காற்றின் தரக் குறியீடு 471 ஒன்றாக பதிவாகியுள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், காற்று மாசுபாடு குறித்து, சமூக ஆர்வலர் ஆதித்ய துபே மற்றும் சட்டக்கல்லூரி மாணவர் அமன் பங்கா ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்த முழு முடக்கத்தை அமல்படுத்தலாமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இந்நிலையில், மாநில முதல்வர் கெஜ்ரிவால் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அளித்துள்ளார். இது தொடர்பாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்திற்கு பின், சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,

காற்று மாசை தடுக்கும் வண்ணம், திங்கள்கிழமை முதல் டெல்லியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒருவாரத்திற்கு மூடப்பட்டிருக்கும்.

டெல்லியிலுள்ள அரசு ஊழியர்கள் ஒரு வாரத்திற்கு வீட்டிலிருந்து வேலை செய்வார்கள்.

வீட்டில் இருந்தே தனியார் அலுவலகங்கள் வேலை செய்ய ஆலோசனை வழங்கப்படும்.

தனியார் வாகனங்களை நிறுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும். திங்கள்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நகரில் கட்டுமானப் பணிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.