புடவையில் தத்ரூப ஓவியம் வரைந்த நெசவாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு
புடவையில் தத்ரூபமாக ஓவியம் வரைந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
சமீபத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த கைத்தறி நெசவாளியான பிரேன் குமார் பசக்கிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இது குறித்து பிரதமர் மோடி கூறுகையில், மேற்கு வங்கத்தின் நாடியாவைச் சேர்ந்த பிரேன் குமார் பசக், பாரம்பரியமிக்க நெசவாளி. புடவைகளில் இந்திய வரலாறு மற்றும் கலாசாரங்களை பிரதிபலித்தவர். பத்ம விருது வாங்கியவர்களிடம் பேசிக் கொண்டிருந்த போது பிரேன் குமார் பசக் எனக்கு அளித்த அன்புப் பரிசு என்றென்றும் என் நினைவில் நிற்கும் என்றார்.
பிரேன் குமார் பசக் பரிசளித்த புடவையில், பிரதமர் மோடி, மக்களிடம் உரையாற்றும் காட்சி தத்ரூபமாக சித்தரிக்கப்பட்டிருந்தது. கடந்த 1970ல் பிரேன் குமார், தன் சகோதரருடன் கோல்கட்டா வீதிகளில் வீடு வீடாகச் சென்று புடவைகளை விற்பனை செய்து வந்தார். இன்று 25 கோடி ரூபாய் விற்று முதல் பெற்று வரும் நிறுவனத்தை நடத்தும் அளவிற்கு உயர்ந்திருக்கிறார்.

