மன்மோகன் சிங் ஜி விரைவில் குணமடைய நான் பிரார்த்தனை செய்கிறேன் - பிரதமர் மோடி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மன்மோகன் சிங் அவர்களுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு எரிச்சல் ஏற்பட்டதைத் தொடர்ந்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் காய்ச்சல் காரணமாகவே அனுமதிக்கப்பட்டதாகவும், தற்போது அவரது உடல்நலம் சீராக இருப்பதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை தகவல் தெரிவித்திருக்கிறது.
எனினும், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் கூறி வருகிறார்கள். இது இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், “முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஜி விரைவில் குணமடைந்து நல்ல உடல்நலம் பெற பிரார்த்திக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
I pray for the good health and speedy recovery of Dr. Manmohan Singh Ji.
— Narendra Modi (@narendramodi) October 14, 2021