125 ரூபாய் சிறப்பு நாணயம் - பிரதமர் மோடி வெளியிட்டார்
125 ரூபாய் நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். இஸ்கான் நிறுவனர் சுவாமி பிரபுபாதாவின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரை சிறப்புமிக்கும் வகையில் இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டது.
கிருஷ்ண உணர்வுக்கான சர்வதேச சங்கம் என்ற அமைப்பை நிறுவியவர் ஸ்ரீ பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா. இவருடைய 125வது பிறந்தநாள் விழாவில், சிறப்பு நினைவு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு நாணயத்தை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இந்த நினைவு நாணயத்தை வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சி மூலம் வெளியிட்டுள்ளார்.
நாணயத்தை வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோதி பேசியதாவது -
சுவாமி பிரபுபாதா இயற்கைக்கு அப்பாற்பட்ட கிருஷ்ண பக்தர்ராவார். இவர் ஒரு சிறந்த தேசபக்தர். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் சுவாமிஜி போராடினார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு ஆதரவாக, அவர் கல்வி பயின்ற ஸ்காட்டிஷ் கல்லூரியில் டிப்ளமோ பெற மறுத்துவிட்டார்.
இஸ்கான் அமைப்பு, ஹரே கிருஷ்ணா இயக்கம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆலயங்களை நிறுவியுள்ளது சுவாமி பிரபுபாதா தோற்றுவித்த இஸ்கான் அமைப்பு.
உலகிற்கு பக்தி யோகத்தின் பாதையைக் காட்டும் பல புத்தகங்களை சுவாமி பிரபுபாதா எழுதியிருக்கிறார். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள இஸ்கான் கோவில் மற்றும் குருகுலம் ஆகியவை இந்திய கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது. நம்பிக்கை என்பது வைராக்கியம், உற்சாகம் மற்றும் மனிதநேயத்தில் நம்பிக்கை.
அதை இஸ்கான் உலகிற்கு எடுத்துக் கூறியுள்ளது. மனிதாபிமானம், யோகா, ஆயுர்வேதம் மற்றும் அறிவியல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா உலகிற்கு கணிசமான பங்களிப்பை இஸ்கான் அமைப்பு கொடுத்துள்ளது. உலகமே இந்த நம்பிக்கையின் நன்மைகளைப் பெறுகிறது.
நாம் வேறு எந்த நாட்டிற்கும், அங்குள்ள மக்களும் 'ஹரே கிருஷ்ணா' என்று கூறி எங்களை சந்திக்கும்போது, நாங்கள் எப்படி உணர்கிறோம் என்பதே மிகப் பெரிய வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
