இந்தியாவில் மிரட்டும் புதிய வைரஸ்! ‘கண்டுபிடிப்பதற்கு முன்பே மரணம்’ - மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை

india-samugam
By Nandhini Sep 02, 2021 08:00 AM GMT
Report

ஸ்க்ரப் டைபஸ் என்னும் புதிய வகை வைரஸ் அசாம் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் அதிகமாக பரவி வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று முதல் அலை, இரண்டாம் அலை என அடுத்தடுத்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கருப்பு பூஞ்சை, ஜிகா வைரஸ் உள்ளிட்ட பிற வைரஸ்களும் பரவி வருகிறது. வைரஸ்களின் பாதிப்பை கண்டறிய லட்சக்கணக்கான மருத்துவர்கள் ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரு வாரங்களாக ஸ்க்ரப் டைபஸ் என்னும் புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. அம்மாநிலங்களில் குழந்தைகளுக்கம், பெரியவர்களுக்கும் அதிகமானோர் காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களது மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் டெங்கு, கொரோனா வைரஸ் இல்லையென உறுதி செய்துள்ளனர். காய்ச்சலைக் கண்டறிவதற்கு முன்னரே சிலர் உயிரிழந்து வருகின்றனர்.

இது ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் என்பதை மருத்துவர்கள் உறுதிப்படுததியுள்ளனர். இந்நோய், ஓரியன்டியா சுட்சுகாமுஷி என்னும் வைரஸ் மூலமாக பரவுகின்றது என்றும், லார்வா பூச்சிகள் கடிப்பதன் மூலமாக மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி, உடம்பு வலி ஏற்படுமாம். நோய் பாதிப்பு அதிகமானால் மூளைக்காய்ச்சல், இதய செயலிழப்பு, கோமா போன்ற உயிருக்கு ஆபத்தான நிலையை ஏற்படுத்திவிடும். இதற்கான தடுப்பூசி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

மதுரா, மெயின்புரி மாவட்டங்களில் இந்நோய் அதிகமாக பரவி வருகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்ஸிசைக்ளின் என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்க நோய் தடுப்பு கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ஸ்க்ரப் டைபஸ் வைரஸ் இந்தியா மட்டுமல்லாது சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளில் பரவி வருவதாக தெரிய வந்துள்ளது.

இதிலிருந்து மக்கள் தங்களை காத்துக்கொள்ள கொசுக்கள் மற்றும் பூச்சிகள் தங்களைக் கடிப்பதில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 

இந்தியாவில் மிரட்டும் புதிய வைரஸ்! ‘கண்டுபிடிப்பதற்கு முன்பே மரணம்’ - மருத்துவர்கள் கடும் எச்சரிக்கை | India Samugam