ஆப்கானிஸ்தான் விவகாரம் : ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி ஆலோசனை

india-samugam
By Nandhini Aug 24, 2021 12:02 PM GMT
Report

ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் பிரதமர் நரேந்திர மோடி விரிவாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை 45 நிமிடங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அந்த பதிவில், ஆப்கனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக, எனது நண்பர் அதிபர் புடினுடன் விரிவாகவும், பயனுள்ள வகையிலும் ஆலோசனை நடத்தினேன். இந்த ஆலோசனையில், கோவிட்டிற்கு எதிரான இந்தியா - ரஷ்யா ஒத்துழைப்பு உள்ளிட்ட இரு தரப்பு விவகாரங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினோம். முக்கிய விவகாரங்கள் குறித்து தொடர்ந்து ஆலோசனை நடத்தவும் ஒப்பு கொண்டோம் என்று பதிவிட்டுள்ளார்.