ஆப்கானிஸ்தாலிருந்து மேலும் 78 இந்தியர்கள் பத்திரமாக மீட்பு
ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று டெல்லிக்கு வந்தடைந்தனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து, அங்கே இருந்த தங்கள் நாட்டு மக்களை அமெரிக்கா, இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீட்டுக்கொண்டு வருகிறத. ஆப்கானிஸ்தானிய மக்களையும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீட்டு வருகிறது. மேலும், ஆப்கன் மக்கள் தலிபான்கள் மீது ஏற்பட்ட அச்சத்தால் தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள்.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவால் மீட்கப்பட்ட 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் தஜிகிஸ்தானில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தஜிகிஸ்தானில் தங்க வைக்கப்பட்டிருந்த 25 இந்தியர்கள் உள்பட 78 பேரும் இன்று இந்தியாவிற்கு வந்து சேர்ந்தனர்.
அவர்கள் தஜிகிஸ்தானிலிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று காலை டெல்லிக்கு வந்தடைந்தார்கள். முன்னதாக, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் காபூலிலிருந்து இந்திய விமானங்கள் மூலம் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
