ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! எல்லையில் பதற்றம்

india-samugam
By Nandhini Aug 20, 2021 10:08 AM GMT
Report

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோராவில் பாம்பூர் பகுதியில் க்ரூ என்ற இடத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து பயங்கரவாதிகளை தேடும் பணியில் இன்று அதிகாலையில் ஈடுபட்டார்கள். இதில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தார்கள். இந்த துப்பாக்கிச் சண்டை மோதலில் ஒரு பயங்கரவாதியை படையினர் சுட்டு கொன்றனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இந்த என்கவுண்ட்டரில் மற்றொரு பயங்கரவாதியையும் படையினர் சுட்டு கொன்றிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரும் ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர்களாவர். இது பற்றி காஷ்மீர் ஐ.ஜி. விஜய் குமார் கூறுகையில், கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் ஒருவன் நடப்பு ஆண்டு ஜூலை 23ம் தேதி பாஸ்டுனா பகுதியில் அமைந்த அரசு பள்ளி ஒன்றின் பணியாளரை கொலை செய்ததில் தொடர்புடையவன். க்ரூ பகுதியை சேர்ந்த முசைப் முஷ்டாக் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றார். 

ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை! எல்லையில் பதற்றம் | India Samugam