இந்தியக் குடியரசுத் தலைவருக்கு அறுவை சிகிச்சை
இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்துள்ளது.
இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் (75) கண்ணில் ஏற்பட்ட பிரச்சனையால் ராணுவ மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். ‘ அப்போது, அவருக்கு கண்ணில் புரை இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் கூறினர். அதன்படி ஜனாதிபதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததால் அடுத்த சில மணி நேரங்களிலேயே அவர் ஜனாதிபதி மாளிகைக்கு திரும்பிவிட்டார்.
இதுகுறித்து டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவிக்கையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காலை மருத்துவமனையில் கண்புரை அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பின்னர், அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என்று தெரிவித்திருக்கிறது.
