நிலச்சரிவில் வேகமாக உருண்டு வந்த பெரிய பெரிய பாறைகள் - பாலத்தில் மேல் விழுந்ததில் 9 பேர் பலி! நெஞ்சை உலுக்கிய அதிர்ச்சி வீடியோ

india-samugam
By Nandhini Jul 26, 2021 06:39 AM GMT
Report

தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்தக் கனமழையால் ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று நிகழ்ந்த கோரச் சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. திடீரென கின்னார் மாவட்டத்தில் அமைந்துள்ள சங்லா பள்ளத்தாக்கில் நிலச்சரிவு ஏற்பட்டது.

அப்போது, சங்லா-சிட்குல் சாலையில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு டெம்போ ஒன்று சென்றது. மலைகளிலிருந்து ராட்சத பாறைகள் வேகமாக உருண்டு தரையை நோக்கி வந்து கொண்டிருந்தன.

அந்த நேரத்தில் நிறைய பாறைகள் வேகமாக வந்து விழுந்ததால் தரையிலிருந்த பாலம் இடிந்து விழுந்தது. சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்த டெம்போவும் பாலத்துடன் கீழே விழுந்து நொறுங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே டெம்போவிலிருந்த ஒன்பது சுற்றுலாப் பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதில் ஒருவர் தான் ஆயுர்வேதா மருத்துவர் தீபா சர்மா. ஜெய்ப்பூரைச் சேர்ந்த இவர் சுற்றுலாவுக்காக இமாச்சலப் பிரதேசம் வந்தார்.

பல்வேறு இடங்களுக்குச் சென்ற இவர் சென்ற இடமெல்லாம் போட்டோக்கள் எடுத்து அதனை ட்விட்டரில் பதிவிட்டிருந்து வந்துள்ளார். அதுபோல தான் நண்பகல் 12.59 மணிக்கு, அதாவது விபத்து நடைபெறுவதற்கு 30 நிமிடத்திற்கு முன் நகஸ்டி செக் பாய்ண்டில் நின்று போட்டோ எடுத்து அதை பதிவிட்டுள்ளார்.