பிரதமர் மோடியை பேசவிடாமல் அமளி - மக்களவை ஒத்திவைப்பு!

5 days ago

இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. அப்போது, இடைத்தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதனையடுத்து, புதிதாகப் பதவியேற்றுக் கொண்ட அமைச்சர்களைப் பிரதமர் மோடி, அறிமுகம் செய்து வைக்க முயன்றார்.

அப்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டன. இதன் பின்னர், மக்களவை மதியம் இரண்டு மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சிகளுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

இதற்கிடையே மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் மறைந்த மாநிலங்களவை எம்.பிக்களுக்கும், ஆளுமைக்கும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடங்கியது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்