38 மனைவிகள், 89 குழந்தைகளின் தந்தை உயிரிழந்தார்!

1 month ago

38 மனைவிகளின் கணவரும், 89 குழந்தைகளின் தந்தையும், 33 பேரக்குழந்தைகளின் தாத்தாவுமான ஜியோனா சானா (76) உடல்நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.

ரத்த அழுத்தம், நீரிழிவு பிரச்சனையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார்.

வடகிழக்கு மாநிலம் மிசோரம் பக்தாவங் தங்குணம் கிராமதைச் சேர்ந்தவர் ஜியோனா. 21.7.1945ம் ஆண்டு பிறந்த ஜியோனா சானா தனது 17வது வயதில் முதல் திருமணம் செய்தார்.

இவருக்கு 38 மனைவிகள். இத்தனை மனைவிகளின் வழியாக ஜியோனாவுக்கு 89 குழந்தைகள் இருக்கிறார்கள். அவர்களில் பலருக்கும் திருமணமாகியுள்ளது.

தற்போது ஜியோனாவுக்கு 33 பேரக் குழந்தைகள் உள்ளனர். இத்தனை பேரும் ஒரே இடத்தில் வசிப்பதுதான் ஆச்சரியமான விஷயம்தான். 4 மாடி கட்டிடம், வீட்டில் 100க்கும் மேற்பட்ட அறைகள் இருக்கிறது. இத்தனை பேருக்கும் மொத்தமாக சேர்த்து சமையல் செய்யப்பட்டு வருகிறது.

உலகிலேயே மிகப்பெரிய குடும்பம் என்ற பெயர் பெற்றுவிட்டதால், மிசோரமில் இருக்கு ஜியோனா இல்லம் ஒரு சுற்றுலா தளமாகவே மாறியிருந்தது. ஜியோனா குடும்பத்தை பார்க்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வந்து போவார்கள். உடலக்குறைவால் ஜியோனா உயிரிழந்தாலும், அவரது புகழ் உலகம் முழுவதும் பரவியுள்ளது.   
ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்