தனியாக மருத்துவமனைக்கு வந்து 3 வயது சிறுமி செய்த காரியம் - இந்திய அளவில் ட்ரெண்டிங்

india-samugam
By Nandhini Jun 08, 2021 06:06 AM GMT
Report

இந்தியாவில் 3 வயது சிறுமி ஒருவர் தனக்கு, சளி, இருமல் இருப்பதாக கூறி, தானாக கொரோனா பரிசோதனை செய்ய வந்துள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் நாகாலாந்தில் ஸன்ஹிபோடோ மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிறுமி லிபவி (3). இவருக்கு லேசான சளி அறிகுறி இருந்துள்ளது. லிபவியின் தாய், தந்தை இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். வழக்கம்போல் அவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டனர்.

இதனையடுத்து, லிபவி தனக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்து, அருகில் இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்து தனியாக வந்துள்ளார். முகக்கவசம் அணிந்து தனியாக வந்த சிறுமியை பார்த்த மருத்துவர்கள் அவரிடம் என்னடா செல்லம் என்று கேட்டுள்ளனர்.

அதற்கு அந்த சிறுமி, மருத்துவரிடம் தனக்கு லேசான சளி, காய்ச்சல் அறிகுறிகள் உள்ளது என்றும், எனக்கு கொரோனா பாதிப்பு இருக்கா என பரிசோதித்துப் பாருங்கள் என கூறியுள்ளார். இதைக் கேட்ட மருத்துவர் ஆச்சரியமடைந்தார்.

உடனே மருத்துவர் சிறுமிக்கு பரிசோதனை செய்தார். தனக்கு கொரோனா அறிகுறி தென்பட்டாலும், பரிசோதனை செய்யவோ, தடுப்பூசி போட்டுக்கொள்ளவோ பெரியவர்கள் தயங்குகின்றனர். ஆனால், இந்த 3 வயது குழந்தையின் தைரியம் ஒட்டுமொத்த மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

இச்சிறுமிக்கு சமூகவலைத்தளத்தில் பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்திய அளவில் சிறுமியின் வீடியோ ட்ரெண்ட்டாகியுள்ளது.