பிரதமரிடம் புகாரளித்த 6 வயது சிறுமி - டுவிட்டரில் ட்ரெண்டிங்
காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேரம் ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாகவும், நிறைய வேலை கொடுப்பதாகவும் பிரதமர் மோடியிடம் வீடியோ மூலம் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகம் பரவி வருவதால் மத்திய அரசுகள், மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், மக்கள் அனைவரும் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்தியா முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஷ்மீரை சேர்ந்த 6 வயது சிறுமி, நீண்ட நேர ஆன்லைன் வகுப்புகளால் மனதளதில் விரக்தி ஏற்படுவதாக வீடியோ மூலம் பிரதமர் மோடியிடம் புகார் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் சிறுமி, எனது ஆன்லைன் வகுப்புகள் காலை 10 மணிக்கு துவங்கி மதியம் 2 மணி வரை தொடர்கிறது. ஆங்கிலம், கணிதம், உருது மற்றும் சுற்றுச்சூழல் கல்வி அதன்பின்னர் கணினி வகுப்பும் உள்ளது. குழந்தைகளுக்கு நிறைய வேலை இருக்கிறது. சிறிய குழந்தைகள் ஏன் இவ்வளவு வேலைகளை சமாளிக்க வேண்டும்? என்ன செய்ய முடியும் மோடி ஐயா? என்று மழலை குரலில் பேசியுள்ளார்.
டுவிட்டரில் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.