பரபரப்பான ஆட்டம்; நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி த்ரில் வெற்றி
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இரட்டை சதம் அடித்த ஷுப்மன் கில்
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் ஷுப்மன் கில், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். தொடக்க விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் ரோகித் சர்மா 34 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த விராட் கோலி 8 ரன்களும் , இஷான் கிஷன் 5 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மறுபுறம் ஷுப்மன் கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார்.
தொடர்ந்து ஆடிய சுப்மன் கில் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சூர்யகுமார் யாதவ் 31ரன்களும் , ஹர்திக் பாண்டியா28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கில் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் இரட்டைசதம் அடித்து அசத்தினார். இவர் 19 பவுண்டரி, 9 சிக்சர் விளாசி 208 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த 5-வது இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.
வெற்றிக்காக போராடிய நியூசிலாந்து வீரர்கள்
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 349 ரன்கள் குவித்தது. இதையடுத்து 350 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது.
தொடக்க வீர ஆலின் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதே நேரத்தில் 7-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மிச்செல் பிரேஸ்வெல் அதிரடி காட்டினார்.
இவருடன் மிச்செல் சான்ட்நர் ஜோடி சேர்ந்து இந்திய பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர். மின்செல் பிரேஸ்வெல் அபாரமாக விளையாடி 140 ரன்கள் குவித்தார்.
78 பந்துகளை சந்தித்த இவர், 12 பவுண்டரியும், 10 சிக்சர்களை விளாசினார். அவருக்கு துணையாக மின்செல் சான்ட்நர் அதிரடியாக விளையாடினார். இவர் 45 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். இந்த இரண்டு பேரும் சேர்ந்து அணியின் வெற்றிக்காக கடுமையாக போராடினர். ஆனால் அணியின் எண்ணிக்கை 293 ஆக இருந்தபோது மின்செல் சான்ட்நர் ஆட்டம் இழந்தார்.
த்ரில் வெற்றி
இருந்தால் இந்திய அணிக்கு வெற்றி பிரகாசமாக இருந்தது. பின்னர் வந்த வீரர்கள் யாரும் விளையாடவில்லை. இதனால் நியூசிலாந்து அணி 49.2 ஓவரில் 337 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இதனால் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி த்ரில் வெற்றி பெற்றது. இந்திய அணித் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் மற்றும் தாகூர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.