இந்திய அணியில் இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை - முன்னாள் வீரர் அதிர்ச்சி தகவல்

T20 World Cup INDvNZ INDvPAK Brad Haddin
By Petchi Avudaiappan Oct 28, 2021 08:05 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in கிரிக்கெட்
Report

இந்திய அணியின் பிரச்சனை குறித்து  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார்.

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிகம் எதிர்பார்கப்பட்ட போட்டியான இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில், இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. 

இந்த போட்டி முடிந்து இரண்டு நாட்கள் நிறைவடைந்துவிட்டாலும், இந்த போட்டி குறித்தான விவாதங்கள் இன்னும் குறைந்த பாடில்லை. குறிப்பாக இந்திய அணி பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தான் அணியின் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை என்ற கருத்து பேசப்பாடு வருகிறது. 

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாடின் பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது,. இந்திய அணியின் பிரச்சனை குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அதில் இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பந்து வீசுவார் என்பதற்காக இந்திய அணி பினிசராக வைத்துள்ளது.

இந்திய அணியில் பந்து வீச கூடிய ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தேவை என்றால் ஷர்துல் தாகூரை இணைத்துக் கொள்ளலாம். என தெரிவித்துள்ளார்.