இந்தியா முழுவதும் இன்று 72வது குடியரசு தின விழா கொண்டாட்டம்
இந்தியா முழுவதும் இன்று நாட்டின் 72வது குடியரசுத் தின விழா கோலாகலமாக கொண்டாப்படப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை ஏற்கிறார்.
இதனை தொடர்ந்து, நாட்டின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு மாநில கலைநிகழ்ச்சிகள் மற்றும் கண்கவர் வாகன அணிவகுப்பு நடைபெறுகின்றன. கொரோனா பரவல் காரணமாக வெறும் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், 50 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக சிறப்பு விருந்தினர்கள் யாரும் பங்கேற்காமல் குடியரசு தின விழா நடைபெற உள்ளது. மேலும் மக்கள் கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உட்பட பொது இடங்களில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.