இந்தியாவில் மீண்டும் அதிகரித்த கொரோனா பாதிப்பு

covid19 indiareports coronaindia
By Irumporai Apr 13, 2022 04:36 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா 3-வது அலை முற்றிலும் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது. கடந்த 4-ந்தேதி தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்குள் வந்தது. அதன்பிறகு சற்று ஏறுமுகமாக இருந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் ஆயிரத்துக்குள் (861) வந்தது. நேற்று இது மேலும் குறைந்து ஒரு நாள் பாதிப்பு எண்ணிக்கை 796 ஆக பதிவாகி இருந்தது. இந்நிலையில் இன்று புதிதாக 1,088 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

இதுதொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 88 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,38,016 ஆக அதிகரித்துள்ளது

. அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,21,736 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,25,05,410 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 10,870 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,86,07,06,499 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 15,05,332 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.