CAA: அமெரிக்கா சொன்ன அந்த வார்த்தை; தலையிடாமல் இருப்பது நல்லது - பொங்கிய இந்தியா!
சிஏஏ குறித்த அமெரிக்காவின் கருத்துக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்கா கருத்து
கடந்த மார்ச் 11ஆம் தேதி சிஏஏ சட்டம் மத்திய அரசால் இந்தியாவில் அமல்படுத்தப்பட்டது. இதனை எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில், சிஏஏ குறித்த அறிவிப்பு கவலை தருவதாகவும் சர்ச்சைக்குரிய சட்டத்தைச் செயல்படுத்துவதை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா கருத்து தெரிவித்தது.
இந்தியா பதிலடி
தற்போது இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் பன்மைத்துவ மரபுகளைப் புரிந்து கொள்ளாதவர்கள் எங்களுக்குப் பாடம் எடுக்க முயலாமல் இருப்பது நல்லது.
இந்திய அரசியலமைப்பு அதன் குடிமக்கள் அனைவருக்கும் மத சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. இங்குள்ள சிறுபான்மையினருக்கு எந்தவொரு பாகுபாடும் இல்லை. கஷ்டத்தில் இருப்போருக்கு உதவக் கொண்டு வந்த சட்டத்தை வாக்கு வங்கி அரசியல் என்ற நோக்கில் மட்டும் பார்க்கக் கூடாது.
இந்தியாவின் பன்மைத்துவ மரபுகள் மற்றும் பிரிவினைக்குப் பிந்தைய வரலாறு ஆகியவை குறித்துச் சரியான புரிதல் இல்லாதவர்கள் தேவையில்லாமல் பேசாமல் இருப்பதே நல்லது. இந்தியாவின் நலம் விரும்பிகள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நோக்கத்தை வரவேற்கத் தான் வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.